News
மீண்டும் தொடங்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு !

காமெடி அரசுரன் நகைச்சுவை மன்னன் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் பாடல் பதிவுகளுக்காக லண்டன் சென்றது படக்குழு அங்கிருந்து இந்தியா திரும்பிய போது வடிவேலு மற்றும் இயக்குநர் சுராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு படப்பிடிப்பு தொடங்குவதில் சற்றி தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 18-ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்து வருகிறது.