News
சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா !

திருமணத்துக்கு பின்னரும் பாடு பிஸியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழில் தற்போது எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2, போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இது ஒரு பெண் முதன்மை கொண்ட திரைப்படம். இந்த கதை நயன்தாராவுக்கு பிடித்து போக தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.