இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிராம், டிம்பிள் கபாடியா, ஆஷூதேஷ் ராணா மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளியான இப்படம் தமிழ் மொழியில் டப்பிங் செய்து நேற்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் பதான்.
இந்திய அரசின் ரகசிய ஆராய்ச்சி குழுவின் ஒரு முக்கிய வீரர் ஷாரூக்கான். ராணுவ மோதல்களில் சிறு காயமடைந்து வீட்டில் இருக்கும் வீரர்களை ஒன்றாக சேர்த்து தனி குழுவாக செயல்பட்டு வருகிறார். துபாயில் இந்திய அரசு விஞ்ஞானி ஒருவரை ஜான் ஆபிராம் தலைமையிலான ஒரு குழு கடத்தி செல்கிறது. முன்னால் ரா உளவாளியான ஜான் ஆபிரகாம் ஏதோ ஒரு காரணத்தால் தன் நாட்டுக்கு எதிராகவே சேலை செய்யும் சர்வதேச குற்றவாளியாக மாறிவிடுகிறார்.
ஜான் ஆபிரகாம் ரத்த வித்து என்ற ஒரு ஆபரஷனை செய்ய போவதாக தகவல் கிடைக்கிறது ஷாருக்கானுக்கு. அதன் மூலம் சின்னம்மை நோயை மீண்டும் இந்தியாவில் பரப்ப திட்டமிடுகிறார். இது வந்தால் இதுக்கு மாத்து மருந்து இல்லை கொரோனா விட கொடிய கிருமி இது. இவை எல்லாம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் துணையுடன் செய்ய திட்டமிடுகிறார் ஜான் ஆபிரகாம். இந்த சதித்திட்டத்தை ஷாரூக்கான் எப்படி முறியடித்து நாட்டை காப்பாற்றினார் என்பது படத்தின் மீதிக்கதை.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகும் ஷாருக்கான் திரைப்படம் இது. நீண்ட அந்த காத்திருப்பை இப்படம் பூர்த்தி செய்துவிட்டார் இப்படத்தின் மூலம். விறுவிறுப்பான ஆக்ஷன் ஹீரோவாக காட்சிக்கு காட்சி மிரட்டுகிறார். அதிலும் சண்டைக்காட்சிகளில் சூப்பர் மேன் போல மிரம்மிக்க செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளில்தான் இப்படி என்றால் சோகம், காதல் என அனைத்திலும் அசத்துகிறார்.
படத்தில் எந்த அளவு ஷாருக்கான் முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வில்லன் ஜான் ஆபிராமிக்கு கொடுத்துள்ளார் இயக்குநர் முன்னாள் ரா அதிகாரியாக இருந்து அதனாலேயே தன் கர்ப்பிணி மனவியை இழக்கிறார். தன் மனைவியை காப்பாற்ற முடியும் ஆனாலும் காப்பற்றவில்லை என் அரசாங்கம் என்ற கோபத்தில் இப்படி ஒரு சர்வதேச டானாக மாறுகிறார். ஒரு சர்வதேச டான் எப்படி இருப்பான் எப்படி நடந்து கொள்வான் என்பதை நம் கண் முன் அப்படியே காண்பிக்கிறார் ஜான் ஆபிரகாம்.
தீபிகா படுகோனே ஒரு நடிகை இதற்கு மேல் கவர்ச்சி காட்ட முடியுமா என்ற அளவுக்கு காட்டு காட்டு என காட்டியுள்ளார். எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறாரோ அதே அளவு அதிரடி காட்சிகளிலும் அசத்துகிறார். இவர் காதல் பாடல் பாடும் ஹீரோயின் அல்ல வில்லன்களை கதற விடும் ஹீரோயின்.
ரா தலைமை அமைப்பின் தலைவியாக வரும் டிம்பிள் கபாடியா, கர்னல் ஆக வரும் அஷூதோஷ் ராணா என சிறப்பாக தங்களின் பணியை செய்துள்ளார். அதிலும் நாட்டை காப்பாற்ற டிப்பிள் கபாடியா நாட்டை காப்பாற்ற இவர் செய்யும் தியாகம் மேல் சிலிர்க்க வைக்கிறது.
ஷாருக்கானை காப்பாற்ற சிறப்பு தோற்றத்தில் வரும் சல்மான் கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. அதே போல இருவரும் தங்களது போட்டியாளர்களை பற்றி வதந்தி பேசி தங்களைப் சுயபெருமை படுத்திக்கொள்வது எல்லாம் அருமை.
படத்தில் அதிகம் ரசிக்க வைப்பது ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள். ஹெலிகாப்டரில் தொங்கி கொண்டு சண்டை போடுவது. ஓடும் ரயிலில் சண்டை போடுவது, இன்னோரு ஹெலிகாப்டரிலிருந்து இன்னோரு ஹெலிகாப்டருக்கு தாவுவது, பறக்கும் இயந்திரம் போட்டு கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போடுவது என வியக்க வைத்திருக்கிறார். இவற்றை எல்லாம் கண்டிப்பாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள்.
4 வருட இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் ரசிகர்களுக்கும் சரி பாலிவுட் திரையுலகத்திற்கு சரி இப்படி ஒரு ஆக்ஷன் அதிரசி படம் முழு திருப்தியை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
Pathaan Review By CineTime
[wp-review id=”45292″]