News

அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக நடிகை ஸ்ருதி ஹாசன் தேர்வு !

Published

on

சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பின்னர் தொடர்சியாக அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கில் அறிமுகமான காலத்திலிருந்து நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் தற்போது ஒரு படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஹைதராபாத் டைம்ஸ் என்ற ஊடகம் நடத்திய ஆய்வு ஒன்றில் 2020-ம் ஆண்டின் அதிக ரசிகர்களால் விரும்பப்பட்ட பெண்ணாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த பட்டியலில் பூஜா ஹெக்டெ, சமந்தா, ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகளும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version