News
ரஜினி படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ரஜினி 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஜெயில் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த இப்படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இருந்தாலும் இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.