Connect with us
 

News

கோலிவுட்டை ஆச்சர்ய பட வைக்கும் அளவுக்கு நடந்து முடிந்த வாரிசு வியாபாரம் !

Published

on

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது வாரிசு படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரையில் விஜய் படங்களுக்கு நடக்காத அளவுக்கு பெரிய அளவில் இந்த வியாபாரம் நடிந்துள்ளதாம்.

அதன் படி தமிழக உரிமை மற்ற மாநில உரிமை என 200 கோடி, வெளியாகவுள்ள அனைத்து மொழிகளின் ஓடிடி உரிமை 60 கோடி, சாட்டிலைட் உரிமம் 50 கோட், ஹிந்தி உரிமை 25 கோடி, வெளிநாட்டு உரிமை 50 கோடி, படத்தின் இசை உரிமை 10 கோடி என சுமார் 400 கோடி வரை நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.