News
சுதா கொங்காரா படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா !

இயக்குநர் சிறுட்டை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் கங்குவா. படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது மும்மையில் ஓய்வெடுத்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த மாதம் சூர்யா 43 படத்திற்காக சுதா கொங்காரா இயக்கத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்கவுள்ளது.
இதில் சூர்யா, துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் கல்லூரி மாணவர்களாக நடிக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதற்காக சூர்யா தற்போது கடுமையான பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அடுத்த மாதம் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் அவர் 2 வாரங்கள் தாமதமாகவே கலந்து கொள்வார் என்கிறது சூர்யா தரப்பு. உண்மை சாம்[அவங்களின் அடிப்படையில் உருவாக கூறப்படும் இப்படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது இது பட தலைப்பின் முழு தலைப்பு இல்லை என்பது குறிப்பிட்டக்கது.