News
ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் படம் கைவிடப்பட்டது !

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்று நம் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உருவாகியுள்ளனர். அந்த வரிசையில் நடிகராக இருந்தாலும் பிக்பாச் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்தான் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் ஹரிஷ் கல்யாண் ரைசா இணைந்து நடித்த திரைப்படமான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இத்திரைப்படத்தை இசைமயைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க புதுமுக இயக்குநர் இளன் இயக்கிவிருந்தார்.
இந்த கூட்டணியில் மீண்டும் உருவாகவிருந்த திரைப்படம் ஸ்டார் என்ற திரைப்படம் படன் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவெற்பை பெற்றது.
ஆனால் அத்திரைப்படம் அடுத்த கட்டதுக்கு போகவே இல்லையாம் காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் இப்படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.