Connect with us
 

News

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மீண்டும் வடிவேலு !

Published

on

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பு சில தினங்கள் நடந்த நிலையில் படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வடிவேலு இப்படதிலிருந்து விலகினார். இதனால் வடிவேலுவிடம் நஷ்ட ஈடு கேட்டு படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் பட அதிபர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தடை விதித்தது. இதனால் பல வருடங்களாக வடிவேலு படங்களை எதும் நடிக்கவில்லை. இந்த நிலையில் வடிவேலு இயக்குனர் ஷங்கர் இடையே ஏற்பட்ட மோதலை தீர்க்க மீண்டும் சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் வடிவேலு என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்றும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வருகிறது.