Connect with us
 

News

லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி அண்ணன் ரெடி போஸ்டர் அடி !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 461+ கோடிகளை வசூலித்து படம் மிகப் பெரும் ஹிட் அடித்துள்ளது.

பட ரிலீசுக்கு முன்னர் படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சி நடக்காமல் போனது. இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் அதற்கு ஈடாக லியோ வெற்றி விழாவை சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக காவல்துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் என்ற விவரங்களை காவல்துறை கேட்டிருந்தது. தற்போது லியோவின் வெற்றி விழாவை சென்னையில் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதி கொடுப்பத்தாலும் சில நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விழாவுக்கு 5000 பேர் மட்டுமே இருக்க வேண்டும். லியோ வெற்றி விழாவுக்கு 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பஸ்ஸில் வர அனுமதி கிடையாது. சொன்ன நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். இருக்கைகளுக்கு ஏற்றபடி ரசிகர்கள் அனுமதிக்க வேண்டும் என அந்த நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ளனர்.