Connect with us
 

News

துணிவுக்கு முன்பாக வாரிசு படத்தின் சிறப்பு காட்சி !

Published

on

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து நாளை வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. விஜய்யுடன் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துடன் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இன்று இரவு 1 மணிக்கு துணிவு படத்தின் சிறப்பு காட்சியும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் சிறப்பு காட்சியும் வெளியாகிறது. இந்த இரு படங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

எந்த படம் முதலில் வெளியாகிறதோ அப்படத்தை பற்றித்தான் ரசிகர்கள் அதிகம் பேசுவார்கள். இந்த விஷயத்தில் துணிவு படத்தை விட வாரிசு படத்தை முந்த வைக்க வேண்டும் என படக்குழுவினர் இப்படை ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர்.

அதாவது இன்று இரவு 8 மணிக்கு சினிமா பிரபலங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் சிறப்பு காட்சியை சென்னையில் நடத்த உள்ளனது வாரிசு படக்குழு. இதனால் இன்று இரவு முதலே துணிவு படத்திற்கு முன்பாகவே வாரிசு படத்தின் பேச்சுகள் வர ஆரம்பித்து விடும்.