Reviews

உடன்பிறப்பே – திரைவிமர்சனம் !

Published

on

இராசரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுதிரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள குடும்ப திரைப்படம் உடன்பிறப்பே படத்தின் விமர்சனம்.

Movie Details

  • Cast: Jyotika, Sasi Kumar, Samuthirakani, Soori,
  • Production: 2D Entertainment
  • Director:Era.Saravanan
  • Music:D Imman
  • Language: Tamil
  • Censor: U’
  • Runtime: 2 Hour 16 Mins
  • Release Date: 14 October 2021

வைரவன்(சசிகுமார்) – மாதங்கி(ஜோதிகா) இருவரும் பாசமான அண்ணன் தங்கை இவர்களின் கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இவர்களை வாழ்க்கை புரட்டி போடுகிறது இதன் காரணமாக ஜோதிகா இவரின் கணவர் சமுதிரக்கனி இவர்கள் 15 வருடமாக சசிகுமாருடன் எந்த உறவும் வேண்டாம் என அவருடன் பேசாமல் வாழ்கிறார்கள்.

இப்பிடியே போகும் இவர்களின் வாழ்க்கையில் சசிகுமார் மேல் ஒரு கொலை குற்றம் விழுகிறது யாரும் அவருக்கு சாட்சி சொல்ல வர மறுக்கிறார்கள் காரணம் சசிகுமார் கொஞ்சம் அடிதடி என ஊருக்குள் பெரிய மனிதன் என்றதால் ஆனால் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல வருகிறான் மச்சானான சமுதிரக்கனி அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சசிகுமார் முரட்டுதனமான மனிதனாகவும் பாசமான ஒரு அண்ணனாகவும் தங்கைக்காக எதையும் செய்யும் ஒரு பாசமலர் அண்ணன் போல சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்ப காட்சியில் நாயை காரால் அடித்ததற்கு இவர் இறங்கி வந்து அவர்களை அடித்து தும்சம் செய்தும் காட்சி தங்கைக்காக கொலை பலியை தான் ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்லும் காட்சியிலும் நம் கண்களில் கண்ணீர் வர வைக்கும் நடிப்பு.

ஜோதிகாவுக்கு இது 50-வது திரைப்படம் பாசமான அண்ணன் – கணவர் என இரண்டு பேரையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் இடத்தில் எல்லாம் நம்மை மிகவும் கவர்கிறார். குறிப்பாக கணவர் பேசினால்தான் நான் அண்ணன் கூட பேசுவன் என்று பிடிவாதம் செய்து கொண்டு இருக்கும் காட்சி முதல் படத்தின் இறுதியில் இவர் சசிகுமாரை அண்ணா என்று சொல்லி கட்டிபிடித்து கதறும் காட்சிகளில் நமக்கு கண்களில் கண்ணீரை வரவைத்து விடுகிறார்.

சமுதிரக்கனி மச்சான் செய்வது சரி உங்கள் தங்கை பாசத்துக்கு நான் அடிமை என சொல்லி வீட்டோடு மாப்பிள்ளையாக போய் சந்தோஷமாக இருக்கும் போதும் சரி. சசிகுமாரின் மேல் கோபம் வந்து வீட்டு வெளியே சென்று சசிகுமாரை வெறுக்கும் காட்சிகளில் நடிப்பின் உச்சத்தை காட்ட்சியுள்ளார். படத்தில் நடித்த மற்ற துணை கதாப்பாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

அண்ணன் – தங்கை கதை என்ற பழைய கதையை கையில் எடுத்தாலும் அதை கிராமத்து அந்த வாசனையுடன் கிராமத்து வடிவத்துடன் மிக அழகாக த்ரில்லர் கலந்து சொல்லிருக்கிறார் இயக்குநர்
இரா.சரவணன்.
– Cinetimee

படத்தில் முதல் பாதி போன வேகமே தெரியவில்லை அந்த அளவுக்கு படத்தின் கதை மற்றும் திரைக்கதை அருமையாக போகிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி பல இடங்களில் நமக்கு சலிப்பை கொடுக்கிறது. தேவையில்லாத காட்சிகள் பாடல்கள் என இரண்டாம் பாதி நம் பொறுமையை சோதிக்கிறது. முதல் பாதியில் கொடுத்த நத விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருக்கலாம்.

வேல்ராஜ் அவர்களின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை நம் கண் முன் நிறுத்துகிறது. டி.இமானின் இசை நம்மை தாலாட்டுகிறது.


மொத்தத்தில் உடன் பிறப்பே வழக்கமான கமர்ஷியம்,ஒரு அழகான கிராமத்து குடும்ப திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

Trending

Exit mobile version