Reviews
போட் – விமர்சனம் !
Cast: Yogi babu, Gouri G kishan, M.S.Bhaskar, Chinni Jayanth
Production: Prabha Premkumar & C.Kalaivani
Director: Chimbudeven
Screenplay: Chimbudeven
Cinematography: Madhesh manickam
Editing: Dinesh Ponraj
Music: Ghibran
Language: Tamil
Runtime: 2H 05 Mins
Release Date: 2/August/2024
இயக்குநர் சிம்புதேவன் தமிழ் சினிமாவில் காமெடி படங்களை இயக்கி தனக்கென்று ஒரு பெயரை வைத்துள்ள சிறந்த இயக்குநர். இவரின் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படங்கள் இவரை திரும்பி பார்க்க வைத்த படங்கள். தற்போது அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் போட்.
ஒரு புறம் சுதந்திர போராட்டம் நடக்க மறு பக்கத்தில் இரண்டாம் உலக போர் நடிக்கிறது. ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டுகளை போட்டு அச்சுறுத்தி வந்த சூழலில் சென்னையில் உள்ள கடற்கரையோரம் வெள்ளையர்கள் முகம் இட்டு தங்கியிருந்த முகாமில் குண்டு வீச போகிறார்கள் என்ற தகவல் ஒன்று வெளியாகிறது. இதனை கேட்ட மக்கள் அனைவரும் பதற்றத்தில் தப்பி ஓடுகிறார்கள்.
அதே முகாமில் கைதியாக இருந்த தன் தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் யோகிபாபு அவரது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர். அப்போது அதே படகில் மேலும் 6 பேர் உயிரை காப்பாற்றிக் கொள்ள் படகில் ஏறுகிறார்கள். நடக்கடலில் உயிர் பயத்தில் 9 பேர் பயணிக்கும் போது என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்ந்த நிலையில், இரண்டாம் பாதியில் உயிரை காப்பாற்றிக் கொள்ள யோகிபாபு விதிக்கும் நிபந்தனை என்ன? அவரது நிபந்தனைக்கு மற்றவர்கள் உடன்பட்டனரா? கடைசியில் அவர்கள் முடிவு என்ன? என்பதை மேலும் சுவாரஸ்யமாக்கி போட்டை முடித்துள்ளார் சிம்புதேவன்.
ஒரே ஒரு படகில் குமரனாக வந்து தனது அசத்தலான மற்றும் யதார்த்தமான நடிப்பால் யோகி பாபு நம்மை கவர்கிறார். நூலகராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் படத்தில் யோகிபாபுவிற்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் ஆகும். நடுக்கடல், படகு என்ற ஒரே லொகேஷனில் சலிப்பு தட்டாமல் கதைக்களத்தை நகர்த்தியதில் வசனத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
படத்தில் நடித்த யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், மதுமிதா, ஷாரா, கவுரி கிஷன், லீலா, சாம்ஸ் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வசனங்களும் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயராக நடித்த ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் நடிப்பில் அசத்தியுள்ளார்.
ஒரே ஒரு படகில் குமரனாக வந்து தனது அசத்தலான மற்றும் யதார்த்தமான நடிப்பால் யோகி பாபு நம்மை கவர்கிறார். நூலகராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் படத்தில் யோகிபாபுவிற்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் ஆகும். நடுக்கடல், படகு என்ற ஒரே லொகேஷனில் சலிப்பு தட்டாமல் கதைக்களத்தை நகர்த்தியதில் வசனத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
1943 காலகட்டத்தில் நடைபெற்றாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசியுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத்தை தாங்கி நிற்பதே வசனங்கள்தான். இன்று நாம் சந்திக்கும் சிக்கல்களை பேசியிருப்பதும், இன்றும் மனிதர்களிடம் இருக்கும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை விலாவரியாக அழகாக ரசிக்கும் வண்ணம் வசனமாக எழுதியுள்ளனர்.
இதுபோன்ற படத்தில் பாடல்கள் என்பது ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடும். பின்னணி இசையில் ஜிப்ரான் அசத்தியுள்ளார்.ஆனால், படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலாக இருந்தாலும் அந்த பாடல் கர்நாடிக் கானா-வாக கொடுத்து ஜிப்ரான் அசத்தியுள்ளனர். கிளைமேக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட். இறுதியில் அழகான செய்தியுடன் உரிமையானவர்களுக்கு படத்தை சமர்ப்பித்து முடித்த விதம் பாராட்டுக்குரியது.
படத்தில் பிற்பாதியில் சில இடங்களில் வசனம் நீள்வது போல இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் அந்த குறையை போக்குகிறது. சிம்புதேவனின் படங்களுக்கு பலமே நகைச்சுவை. இந்த போட்டில் நகைச்சுவை பெரும்பாலும் காணவில்லை என்றே கூற வேண்டும். அதற்கு பதிலாக உணர்வுகளை கடத்தியுள்ளார்.
மொத்தத்தில் ‘போட்’ படத்தில் நகைச்சுவை குறைவாக இருந்தாலும் சென்டிமென்ட் காட்சி உணர்வு பூர்வமாக இருக்கிறது.
Rating : 3/5