Connect with us
 

News

‘அரசன்’ படத்தாமதத்திற்கு சிலம்பரசன் காரணமா? – திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த விளக்கம் !

Published

on

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (STR) நடிப்பில் தீவிரமாக உருவாகி வரும் கேங்ஸ்டர் திரைப்படம் ‘அரசன்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரையில் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகாமல் தாமதமாவதற்கு நடிகர் சிலம்பரசந்தான் காரணம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பிரபல திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: “அரசன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக கொண்டு வரலாம் என இயக்குநர் வெற்றி மாறனிடம் பரிந்துரைத்தேன். அதற்கு அவர், ‘நாங்கள் முழு உழைப்பையும் கொடுக்கத் தயார், ஆனால் படம் மிகச்சிறப்பாக வர வேண்டும் என்பதில் நானும் சிலம்பரசனும் அனிருத்தும் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான் படப் பணிகள் சற்று தாமதமாகிறது’ எனக் கூறினார். சிலம்பரசனால் தான் படப்பிடிப்பு தாமதமாவதாகச் சொல்லப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அவர் முழு மூச்சுடன் நடித்துக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்” என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெளிவுபடுத்தியுள்ளார். 

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் சுமார் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரவிருந்த நிலையில், தற்போது இதன் சிறப்பு புரோமோ (Promo) வீடியோ தீபாவளியன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.