Connect with us
 

News

விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு !

Published

on

நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தனது சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் 2022ஆம் ஆண்டு தனது கொரோனாவுடன் ஆரம்பித்துள்ளதாகவும் கொரோனா பாதிப்பு காரணமாக தனக்கு தொண்டை வலி மூக்கடைப்பு காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் இருப்பதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ஏற்கனவே சத்யராஜ், திரிஷா, மீனா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது