Connect with us
 

News

தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் சொன்ன இயக்குநர் விக்னேஷ் சிவன் !

Published

on

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணியின் கேட்டன் தோனியுடன் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘என்னுடைய முன்மாதிரியை சந்தித்த போது எப்படி உணர்ந்தேன் என்பதை வார்த்தைகளால் கூறவோ விவரிக்கவோ முடியாது.

தோனியை சந்தித்தது ஒரு நல்ல கதை மிக விரைவில் அவருக்கு ஆக்‌ஷன் சொல்லி இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தோனியுடன் இருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து. இந்த முறை தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் கூறினேன் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை அணியின் இந்த ஆண்டு ப்ரமோஷன் வீடியோவை அவர் இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது.