Connect with us
 

News

அஜித் 62 திரைப்படம் மாஸ்டர் படம் போல இருக்காது – விக்னேஷ் சிவன் !

Published

on

துணிவு படத்திற்கு பின்னர் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இது அஜித் நடிக்கும் 62-வது திரைப்படமாகும்.

விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கவுள்ளது. அஜித்துடன் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தை குறிப்பிட்டு விஜய்யின் மார்க்கெட் நிலவரத்திற்காவும் இயக்குநரின் படமாகவும் 50-50 படமாக அது உருவானது. அதே போல நீங்களும் அஜித் குமார் அவர்களும் இணையும் படத்திற்காக உங்களில் பாணியை பாற்றி அப்படி ஒரு படம் எடுப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் லோகேஷ் கனகராஜ் ஒரு ஆக்‌ஷன் இயக்குநர் என்பதால் ஒரு நட்சத்திர நடிகருடன் இணைன்வது மிகவும் எளிதானது. என் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருக்காது. அதனால் அஜித் நடிக்கும் இந்த படம் எனக்கான திரைப்படமாகவும் நினைத்ததை செய்யக்கூடிய சுந்ததிரமும் அஜித் 62 படத்தில் இருக்கும் இது முழுக்க முழுக்க என் படமாக மட்டுமே உருவாகும் என்று தெரிவித்தார்.