News
சென்னையில் தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் சூட் !
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவர் மணிரத்னம் படத்தை முடித்த பின்னர் அந்த வேலைகளைத் தொடங்குவார் என தெரிகிறது. மணிரத்னம் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 1991 ஆம் ஆண்டு தளபதி படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஜெயிலர் 2 பட ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியிடப் படவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஷூட்டிங் இன்று சென்னையில் நடக்கிறது.
Continue Reading