Connect with us
 

News

அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் எப்போதே ஆகிவிட்டது !

Published

on

தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த காலத்தில் இருந்து சர்க்கைக்கு பஞ்சமில்லாமல் வலம் வருகிறார் நடிகை அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவுற்க்கு அறிமுகம் ஆனார். பின்னர் அடுத்து அடுத்து பல முன்னனி தமிழ் நடிகர்களுடன் நடிக்க தமிழில் முன்னனி நடிகைகளின் பட்டியலில் இவரும் இணைந்தார்.

இவர் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து ஆனது. அதன் பின்னர் அமலாபால் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் இயக்குநர் விஜய் அவர்கள் படம் இயக்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கடந்த வருடம் இயக்குநர் விஜய் அவர்கள் மருத்துவ பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதே நேரம் அமலாபால் மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் யாருக்குமே சொல்லாமல் இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியானது இந்த புகைப்படங்களை அமலாபால் கணவர் பாவ்னிந்தர் சிங் வெளியிட்டார்.ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை வெளியிட்ட சில மணி நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கு விட்டார். காரணம் என்னவென்றால் அமலாபாலுக்கு தெரியாமல் பாவ்னிந்தர் சிங் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.இதனை ரகசியமாக வைத்திருக்க சொன்ன அமலா பால் கண்டித்ததால் புகைப்படங்களை நீக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கியுள்ளார் பாவ்னிந்தர்.

இதனால் இவர்களுக்கு இடையில் தற்போது சிறு சண்டை ஏற்ப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.