Connect with us
 

News

சீனாவில் ரஜினியின் 3 டி படம்!

Published

on

ரோபாவாக ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கிவருகிறார் ஷங்கர். எமி ஜாக்ஸன் ஹீரோயின்.  வில்லன் ரோபாவாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சுதான்ஷு பாண்டே, அதில் ஹுசைன், கலாபவன் ஷாஜன், ரியாஸ்கான் முக்கிய வேடங் களில் நடிக்கின்றனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். நிரவ்ஷா ஒளிப்ப திவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கான கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடந்துவருகிறது. வழக்கமான 2டி படமாக மட்டுமல்லாமல் 3டி முப்பரிமாணத்திலும் உருவாகிறது. இது பற்றி படதரப்பில் கூறும் போது, ‘2டி வடிவில் உருவாகும் அதே நேரத்தில் 3டியில் இப்படத்தின் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவேண்டும் என்று எண்ணினோம். இதையடுத்து 3டியிலும் இது உருவாகி வருகிறது. சீனாவி லும் இப்படம் 2டி, 3டியில் வெளிவரவுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவில் மட்டும் 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப் பட்டிருக்கிறது’ என்றனர்.