News
வெப் தொடர்கள் இயக்க மாட்டேன் எனக்கு சினிமா மட்டும் போதும் !
தனது இயக்கத்தில் உருவாகும் எல்லா திரைப்படங்கலிளும் காட்சி அமிப்புகளில் கொண்டு வரும் அந்த மாயாஜாலத்தை பற்றி மணிரத்னத்திடம் கேள்வி கேட்க்கப்பட்டது.
அதற்க்கு பதில் கூறிய அவர் திரையில் மாயாஜாலத்தை கொண்டு வந்து ரசிகர்களை பிரமிக்க வைப்பதற்க்குத்தானே எனக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள்? ஒரு படத்தின் இயக்குநராக என் வேலையை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவு சிறப்புடன் நான் அதை இன்று வரை செய்து வருகிறேன்.
படத்திலுள்ள எல்லா காட்சிகளையும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படமாக்கிறோம் ஆனால் சில காட்சிகள் மட்டும்தான் ரசிகர்களை வியக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் மற்ற காட்சிகள் எதுவும் மிரமிக்கவில்லையா? அடுத்த முறை இன்னும் அதிக எண்ணிக்கையான காட்சிகளை சிறப்பாக இருக்க வேண்டும் என்ற முயற்சி செய்துதான் படமாக்குகிறேன்.
வெப்சீரிஸ் ,சின்னத்திரை இவை எல்லாம் எனக்கு தெரியாத விஷயங்கள் எனக்கு தெரிந்த எல்லாம் சினிமா மட்டுமே அது மட்டுமே எனக்கு போதும் என்று கூறினார்.