Connect with us
 

News

சென்சாருக்கு சென்ற அகிலன் 2 நிமிட காட்சிகள் நீக்கம் !

Published

on

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அகிலன். இவர்களுடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துறைமுகம் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பியுள்ளது படக்குழு.

அதில் இரண்டு நிமிட காட்சிகளை சென்சார் குழு நீக்கியுள்ளதாம். இந்த நீக்கப்பட்ட காட்சிகளில் சில அரசியல் வசனம், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் உள்ளதால் அது நீக்கப்பட்டது என கூறப்படுகிறது.