News
கன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றது.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகிறார். உத்தர காண்டா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடராஷா டாலி தனஞ்செயா, மலையாள நடிகர் விஜய்பாபு, ரங்காயணா குரு, சைத்ரா ஜோ, உமா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் டாலி தனஞ்செயாவுக்கு ஜோடியாக துர்கி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தற்போது உத்தரகாண்டா படத்தின் படப்பிடிப்பு பிஜப்பூர் மற்றும் அதன் சுத்துவரட்டாரா பகுதிகளில் நடந்து வருகிறது.