Connect with us
 

News

அருண் விஜய்யின் பார்டர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் Arun Vijay நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’ குற்றம் 23 படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணையும் இரண்டாவது படம் இது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து மிக நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து வருகிறது. ஒரு ராணுவ வீரராக Arun Vijay இபப்டத்தில் நடித்துள்ளார். இவருடன் ரெஜினா கசாண்ட்ரா, ஸ்டெபி பட்டேல், ஷான் ஹாரிஃப் கான், பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் Arun Vijay நடிப்பில் உருவாகியுள்ள மற்றும் ஒரு திரைபப்டம் ‘சினம்’ இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ‘பார்டர்’ திரைபப்டம் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என இன்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.