Connect with us
 

Reviews

பைரி – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Syed Majeed, Meghana Ellen, Viji Sekar, John Glady, Saranya Ravichandran, Ramesh Arumugam, Vinu Lawrence, Anand, Karthick Prasanna, Francis Kiruba, Rajan,
Production: V.Durai Raj
Director: John Glady
Screenplay: John Glady
Cinematography: A.V. Vasantha Kumar
Editing: R.S.Sathish Kumar
Music: Arun Raj
Language: Tamil
Runtime:
Release Date: 23 February 2024

உண்மை சம்பவங்களின் அடைப்படையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம் பைரி. நாகர்கோவில் மாவட்ட ஓர் ஒன்றில் நடக்கும் புறா பந்தயத்தைப் பற்றிய திரைப்படம் இப்படம். அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பதும் புறா பந்தயம் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது நாகர்கோவில் அருகே உள்ள ஊரில். எப்படியாவது தான் ஒரு புறா வளர்த்து பந்தயத்தில் கலந்து கொள்ள விடவேண்டும் என்பது நாயகனின் கனவாக இருந்து வருகிறது. ஆனால் இவர் வீட்டில் புறா வளர்க்கக்கூடாது நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டித்து வருகிறார் நாயகன் சையத் மஜீத்தின் அம்மா. அம்மாவின் அந்த கண்டிப்பையும் மீறி புறா பந்தயத்தில் கலந்து கொள்ள் புறாக்களை தயார்ப்படுத்துகிறார் மஜீத். அதே சமயம் அந்த ஊரை சேர்ந்த ரவுடி வினு லாரன்ஸ் சில தில்லு முல்லு வேலைகளை செய்து புறாவை அதிக நேரம் பறக்க விடுகிறார் இதனை கண்டு பிடித்து அந்த ரவுடியுடன் சண்டை போடுகிறார் ஹீரோ மஜீத். இதனை மனதில் வைத்து ஹீரோ புறாக்களை பந்தயத்தில் கலந்து கொள்ள் வரும் போது அதை கலைத்து விடுகிறான் வில்லன் வினு. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு கொலை வெறி பகை ஏற்படுகிறது அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

என்னதான் புறா பந்தயம் அதன் வரலாறு என ஒரு ஆவணமாக திரைக்கதையை பதிவு செய்தாலும் அதற்கு குடும்பம், பாசம், காதல், பகை, விறுவிறுப்பு என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். குறிப்பாக அந்த ஊரை பற்றி பதிவு செய்த விதம் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்திலும் இயக்குநரின் கடின உழைப்பு தெரிகிறது.

ஹீரோவாக வரும் சைத் மஜீத் எதையும் எதிர் கொள்ளும் ஒரு துடிப்பான இளைஞராக லிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். புறா மீது காட்டும் பாசம் பந்தயம் என வரும் போது காட்டும் வெறியும் என ரசிக்கும்படியான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். ரவுடி வினு லாரன்ஸை எதிர்த்து நேரடியாக மோதும் காட்சிகளிலும் மிரட்டுகிறார்.

படத்தில் வரும் இரு கதாநாயகிகள் மேக்னா எலன், சரண்யா ரவிச்சந்திரன் படத்தில் காதல் காட்சிகள் வேண்டும் அதற்கு நாயகி வேண்டும் என்பதற்கு மட்டுமே இவர்களின் கதாப்பாத்திரம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் இடம் பெறும் கதாப்பாத்திரங்களுக்கு இயக்குநர் அதிக முக்கியதுவம் கொடுத்துள்ளார். நாயகின் நெருங்கிய நண்பனாக இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் கதாப்பாத்திரம் நம்மை கண் கலங்க வைக்கிறது. இளைஞர்களுக்கு ஆதரவாக பண்ணையார் கதாப்பாத்திரத்தில் வரும் ரமேஷ் ஆறுமுகம், ஹீரோ அம்மாவாக வரும் விஜி சேகர், வில்லனாக வரும் வினு லாரன்ஸ் அனைவருமே தங்களின் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் வசந்தகுமார் ஒளிப்பதிவு புறாக்களுடன் சேர்ந்து நாமும் பறக்கின்ற உணர்வை கொடுக்கிறது. படத்தில் வரும் ஏரியல் ஷாட் பரபரப்பான காட்சிகளில் கேமரா வேகமாக பயணிக்கிறது. அருண்ராஜ் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறது. சதீஷ்குமார் படத்தொகுப்பு, சேகர் முருகனின் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

Rating 4.25/5