News
விஷ்ணு விஷால் எடுக்கொண்ட சீன வைத்தியம் !
ராட்சசன் என்ற படத்தின் மூலம் தான் இழந்த இடத்தை பிடித்து இன்று தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் விஷ்ணு விஷால். தற்போது மணு ஆனந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படமான எஃப்.ஐ.ஆர் விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், கவுதம் மேனன், கவுரவ் நாராயணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபி செய்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உடல் வலி மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த புதிய அற்புதமான தெரபிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
உடலில் ரத்த ஓட்டம் குறைவாகவிருக்கும் இடங்களில் கண்ணானி கப்புகளை அழுத்தி வைத்து ரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும் சீனாவின் பழமையான மருத்துவ முறையான கப்பிங் தெரபி பல்வேறு நாடிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.