Connect with us
 

News

இயக்குநர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் காலமானார் !

Published

on

பிரபல இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இவர் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா என்ற திரைப்படதின் மூலம் இயக்குனராக அறிமுகமனார்.

கபாலி, பைரபா, தெறி, பென்சில், உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். ராஜா ராணி, மான் கராத்தே, மரகநாணயம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவரின் மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த சில நாட்களாக மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு திடீரென காலமானார். இதனை அடுத்து அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலர் அருண் ராஜா காமராஜ் அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் இரங்கள் தெரிவித்து வருகிறார்.

கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ள அனைவரையும் நாம் இழந்து வரும் நிலையில் இந்த இழப்பும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.