News
விஜய்க்கு எதிராக தனி நீதிபதி கூறிய கருத்து நீக்கம் !
தளபதி விஜய் தான் வாங்கிய ரோலஸ் ராய் காருக்கு உழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்து ரூ.1 லடம் அபராதம் விதித்தது.
அது மட்டுமில்லாமல் நடிகர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் விஜய் என்று கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த போது ‘காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்து என்னை புண்படுத்தியுள்ளன. என் கடீன உழைப்பில் நான் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சிப்பது தேவையற்றது என்றும் நிலுவை தொகையான ரூ.32.30 லட்சம் ஆகஸ்ட் மாதமே செலுத்தப்பட்டு விட்டதாகவும் தனி நீதிபதி கூறிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் தாக்கல் செய்தார் விஜய்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில் நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.