விஷ்ணு விஷால் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு படிப்புக்கு ஏற்ற வேலை ஒன்றை தேடி வருகிறார் இப்படத்தில் முஸ்லீம் வேடத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு இர்ஃபான் அஹமத் பெயர். தற்போது ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
அதே சமயம் ஜஎஸ்ஜஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் தமிழகத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு ஒரு தகவல் கிடைக்கிறது.
ஒரு நாள் அந்த தீவிரவாதி இர்ஃபான் அஹமத் என்று சந்தேகம் கொள்கிறது இந்திய உளவுத் துறை அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையியும் சிதைத்து விடுகிறது இதனால் அவர்களிடம் இருந்து தப்பித்து எனக்கும் அந்த தீவிரவாத அமைப்பான ஜஎஸ்ஜஎஸ் அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என இர்ஃபான் அஹமத்தின் போராட்டம் வெற்றியா இல்லை தோல்வியா என்பதே படத்தின் மீதிக்கதை.
இர்ஃபான் அஹமத் என்ற முஸ்லீம் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப தாடி, கண்கள் என அந்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். என்.ஜ.ஏ. நடத்தும் கடுமையான விசாரணையில் சிக்கித் தவித்து நான் குற்றவாளி இல்லை என கதறும் இடத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது.
ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷால் தீவிரவாதியாக இருப்பாரோ இவர்தான் அதை செய்திருப்பாரோ என்ற என்னம் நமக்கே வருகிறது. இவரின் கதாபாத்திரத்தில் இருக்கும் அந்த மர்ம முடிச்சி என்பது நம்மால் யூகிக்க முடியாமல் இருக்கிறது.
படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என்று மூன்று நாயகிகள் இருந்தாலும் யாருமே விஷ்ணு விஷாலுக்கு ஜோடியில்லை என்பதும் காதல் காட்சிகள் இல்லை என்பதும் மிகப்பெரிய ஆறுதல் நமக்கு.
முஸ்லிம் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மன நிலைக்கு எதிராகப் பேசியிருக்கிறார் இயக்குநர் அதை பல காட்சிகளில் அவர்கள் சந்திக்கும் வலியை நமக்கு புரிய வைத்துள்ளார் மனு ஆனந்த்.
Cinetimee
ரைசா வில்சன் என்.ஜ.ஏ. அதிகாரியாக வரும் ரைசா வில்சன் மத்திய அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான என்.ஜ.ஏ. முஸ்லிம் பெண்களும் நாட்டுக்காக உயிர் கொடுத்து பணி புரிகிறார்கள் என்பதனை ரைசா வில்சன் கதாப்பாத்திரம் மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இருக்குநர்.
படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு ரைசாவிற்கு உள்ளது அதை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார். மஞ்சிமா மோகனின் கதாப்பாத்திரம் படத்திற்கு தேவைதானா என்ற கேள்வி படம் பார்க்கும் போது நமக்கு வருகிறது. ரெபா மோனிகா ஜான் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஒரு சில இடங்களில் வருகிறார்.
படத்தில் சப்போட்டிங் கதாப்பாத்திரங்கள் கணக்கில்லாமல் வருகிறது. என்னதான் பலர் இருந்தாலும் கதை விஷ்ணு விஷாலை சுற்றியே பயணிக்கிறது. ஆனாலும் விஷ்ணு விஷால் மற்றும் என்.ஜ.ஏ. தலைவராக வரும் கெளதம் மேனன் இருவரின் கதாப்பாத்திரம் நம் மனதில் ஆழமாக பதிகிரது. வர வர கெளதம் மேனன் முழு நேர நடிகராக மாறிவிடுவாரோ என்று தோன்றுகிறது.
ஒளிப்பாதிவாளர் அருள் வின்சென்ட், கலை இயக்குநர் இந்துலால் கவீத், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, ஆகியோர் படத்திற்கும் மிகவும் பக்க பலமாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஷ்வத் இசையில் பெரிதாக நம்மை கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் சிறப்பான ஒரு இசையை கொடுத்து தன் பெயரை பதிய வைக்கிறார்.