Connect with us
 

News

விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மிக எளிதியில் யாருக்கும் கிடைத்து விடாது – மீனாட்சி சவுத்ரி !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆல் டைம். இப்படம் விஜய் நடிக்கும் 68-வது திரைப்படம். இப்படத்தில் விஜய் தந்தைமகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியான சந்தோஷத்தில் உள்ளார். இது பற்றி அவர் கூறும்போதுவிஜய்யுடன் நடிக்கப் போகிறேன் என்று எனக்கு தெரிந்ததும் சந்தோஷத்தில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததால் அந்த நடிகை ஒரு அதிர்ஷ்ட சாலிதான். அந்த அதிர்ஷ்டம் இப்போது எனக்கு கிடைத்துள்ளது.

விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்று இயக்குநர் சொன்ன போது. எனது கால்கள் நடுங்கி விட்டது. படப்பிடிப்பின்போது விஜய் என்னோடு நடந்து கொண்ட விதம் வார்த்தைகளால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவருக்கு நான் தீவிர ரசிகை என்று கூறினார்.