Trailer
சுனைனா நடிக்கும் ரெஜினா படத்தின் டிரைலர் வெளியானது !

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம், ரெஜினா. கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இதன் பரபரப்பான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.