News
மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி !

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் அண்ணாத்த. ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகிவரும் இப்படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது. ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. படத்தை முழுமையாக முடித்து எடிட் போன பின்னர்தான் படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை அனைத்தும் முடித்து விட்டு சென்னை திரும்பினார் ரஜினி. தற்போது அவர் நாளை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்லவிருக்கிறார்.
இன்னும் 20 நாட்கள் வரை படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாம் நாளை முதல் இதன் படப்பிடிப்பி ஆரம்பமாகிறது.
ரஜினிக்கான காட்சிகள் 4 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாம். பின்னர் ரஜினி சென்னை திரும்பிவிட படத்தின் ரஜினியிள்ளாமல் பல காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.