Connect with us
 

News

தளபதி விஜய் 68 இந்த ஹாலிவுட் படம் மாதிரி தான் இருக்குமாம் !

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் துவங்கிய நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் விஜய் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து இன்று காலை சென்னைக்கு திரும்பினார்.

மற்ற காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டு படக்குழு விரைவில் சென்னை திரும்ப உள்ளனர். இப்படம் டைம் ட்ராவல் கதைக்களத்தில் உருவாகிறது என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது. இதற்காக தான் லாஸ் அஞ்சலஸுக்கு சென்று விஜய்க்கு De Aging செய்துள்ளனர் என்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஹாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த லூப்பர் படம் போன்ற கதைக்களம் தான் தளபதி 68 என கூறப்பட்டு வருகிறது. இது தான் இன்றைய நாளுடைய ஹாட் டாப்பிக்காக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.