Connect with us
 

News

சம்பளத்தை உயர்த்தினாரா திரிஷா ?

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட சில படங்களில் நடித்து வந்தார். அப்படங்கள் எல்லாம் இவருக்கு தோல்வியை மட்டுமே கொடுத்து அவரின் மார்கெட்டையும் சரித்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் அவருக்கு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.

இந்த இரு படங்கலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் த்ரிஷா மார்க்கெட் மிண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. லியோ படத்தில் த்ரிஷா சம்பளம் ரூ.4 கோடி. தற்போது த்ரிஷா ரூ.10 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் பரவி வருகிறது. விடா முயற்சி படத்தில் அஜித் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.