Connect with us
 

News

தளபதி 68 படத்துக்கு மூன்று டைட்டில் வைத்திருக்கும் வெங்கட் பிரபு !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் 68 படமான இதை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. விஜய்யுடன் இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி, உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு விஜய் 25 வயது விஜய்யாக நடித்து வருகிறார். இளம் விஜய்யாக காட்டுவதற்காக புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளாராம் வெங்கட் பிரபு.

இப்படத்திற்கு மூன்று டைட்டில் ரெடி செய்து வைத்துள்ளாராம் வெங்கட் பிரபு. அதில் ஒரு தலைப்பு பாஸ். கதைக்கு பாஸ் என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதை புத்தாண்டு தினத்தில் அதிகாரபூர்வ தலைப்பை படக்குழு அறிவிக்கும்.