News
மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை சந்தித்த வைகைப்புயல் வடிவேலு !

வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷனில் மீம்ஸ் கிரியேட்டர்களை சந்தித்தார்.
மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் வடிவேலு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்தில் வடிவேலுவுடன் நடிகை ஷிவாணி நாரயணன், ரெடின் கிங்ஸ்ஸி என பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சூராஜ் இயக்கியுள்ளார்.
லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வடிவேலு படித்துள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்த்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் கலகலப்பான டிரைலரை படக்குழு இரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர். டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்களுடன் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.