Connect with us
 

News

ஒரே நாளில் வெளியாகும் வாரிசு – துணிவு டிரைலர் !

Published

on

தமிழ் சினிமாவில் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக தளபதி விஜய். இவரின் அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்தான் அஜித் குமார். அஜித் குமார் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய படங்கள் பொங்களை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

மிக நீண்ட வருடம் கழித்து இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே சமயம் துபாய் புர்ஜ் கலிபாவிற்கு மேலிருந்து துணிவு பேனருடன் ஸ்கை டைவிங் செய்து துணிவு பட டிரைலர் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிக்கை வெளியிட்டது.

துணிவு படத்தின் டிரைலர் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில். வாரிசு படக்குழுவும் புத்தாண்டில் டிரைலரை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பட வெளியீடு மட்டுமல்ல டிரைலரும் ஒரே நேரத்தில் போட்டி போட ஆரம்பித்துள்ளது.