Connect with us
 

News

ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற தளபதி 67 பட பூஜை !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது.

வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அது உறுதியாகியுள்ளது.

மாஸ்டர் பட தயாரிப்பார் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்காக எந்த ஒரு மீடியாவையும் அழைக்கவில்லை மிகவும் ரகசியாகவும் பாதுகாப்பாகவும் இந்த பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி தயாரிப்பி நிறுவனம் வெளிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் கதையில் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.