News
தலைவி பட பர்ட்ஸ் லுக் போஸ்டரை கேலி செய்யும் ரசிகர்கள் காரணம் என்ன ?

மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை வரலாற்று படமாக்க தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் போராடி வந்தனர் ஆனால் இயக்குனர் விஜய் அந்த வாய்ப்பை தன் வசம் எடுத்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை நான்கு விதமாக இந்த படத்தில் ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ளார் இயக்குநர் ஏ.எல் .விஜய் அவர்கள் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒளிப்பதிவு நிரவ் ஷா.
தலைவி என இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர் நேற்று இந்த படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியானது ஜெயலிலதா வேடத்தில் பாலிவுட்டில் ஆகச் சிறந்த நடிகையான கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். தமிழ்,இந்தி,தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தை பெறுவதற்காக அமெரிக்க சென்று டெஸ்ட் லுக் எடுத்தார் கங்கனா. அது சம்மந்தப்பட்ட போட்டோக்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ர் கொண்ட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் என்னடா தீபாவை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கிறீங்க என கிண்டலடித்து வருகின்றனர்.