Connect with us
 

News

வாரிசு தமிழக வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம் !

Published

on

தளபதி விஜய் நடித்து பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வரவிருக்கும் வாரிசு திரைப்பட தமிழக வெளியீட்டு உரிமத்தை தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் வாங்கியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்பட தமிழக வெளியீட்டு உரிமத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

இதனையடுத்து வாரிசு படத்திற்காக தியேட்டர்களை புக் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது 7 ஸ்க்ரீன் நிறுவனம். தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இதே நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.