Connect with us
 

News

பருத்தி வீரன் வெளியாகி 15வது ஆண்டு ஆகிறது எல்லா புகழும் அமீருக்கே – கார்த்தி !

Published

on

நடிகர் கார்த்தி இன்றுடன் சினிமாவில் தனது பயணத்தில் இன்று 15-வது ஆண்டினை நிறைவு செய்கிறார்.

இவரின் முதல் படமான ‘பருத்தி வீரன்’ படத்திலேயே நான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்று நமக்கு நிரூபித்து காட்டியவர். அப்படத்தில் ஒரு பருத்தி வீரன் போலவே வாழ்ந்து அந்த கதாப்பாத்திரத்துடன் பின்னி பிணைந்திருப்பார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ராம்ஜி அவர்களின் ஒளிப்பதிவும் என படத்துக்கு அனைத்துமே பக்க பலமாக அமைந்தது.

இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ள பதிவில்:- ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நான் ஒரு நடிகனாக களமிறங்கியதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய ஒரு ஒரு அசையும் இயக்குநர் அமீர் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவர் எனக்கு சொல்லிக்கொடுத்ததை மட்டும்தான் நான் நடித்தேன். எல்லா பெருமையும் அமீர் அவர்களுக்கே சேரும்.

இப்படத்தின் மூலம் நிறைய பாடங்களையும் நான் கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு கற்றுக்கொடுத்த விதத்தின் காரணமாக நான் என் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்தேன். என்னை இந்த இடத்துக்கு அழைத்து சென்ற இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல், அண்ணா என்னுடை ரசிகர்கள் ஊடகத்தினர் என அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.