Connect with us
 

Trailer

அவனுக்கு என் கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் என் குழந்தை சேப் – எப்பிடி இருக்கிறது மிஷன் சாப்டர் 1 ட்ரைலர் !

Published

on

அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ள மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரைலர் வெளியானது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை நிமிஷா சஜனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் முழுவதும் அடி தடி துப்பாக்கி சூடு என ஆரம்பித்து செண்டிமெண்ட் காட்சிகள் வரை வந்து போகிறது. ட்ரைலரை பார்த்த வரையில் சிறையில் இருக்கும் அருண் விஜய் அங்கிருந்து தப்பித்து செல்வது கதை என்று ஓரளவு யூகிக்க முடிகிறது. அதன் பின்னர் நடப்பது படத்தின் மிதிக்கதையாக இருக்கும்.