Connect with us
 

News

பிக்பாஸ் புகழ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது !

Published

on

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இதற்கு முன்னதாக ஓ காதல் கண்மனி, சைத்தான் போன்ற திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஹீரோவாக மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் சரியாக ஓடவில்லை.

நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹிம் இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து இரு வீட்டார்களின் சம்மதத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்கள் திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தற்போது இந்த ஜோடிகளுக்கு அழகான குட்டி ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ஆரவ்வுக்கு அவரின் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.