Connect with us
 

News

விஜய் பிறந்த நாளில் வெளியாகும் GOAT திரைப்படம் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் The Greatest Of All Time. விஜய்யுடன் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், மைக் மோகன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது படத்தின் முக்கியமான காட்சியை ஜதராபாத்தில் படப்பிடிப்பு செய்து வருகிறது படக்குழு. இதனை தொடர்ந்து சென்னை கோவளம் பகுதியில் முக்கியமான காட்சி ஒன்றையும் படமாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பை மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருவதால் ஜூன் 22 விஜய் பிறந்த நாள் அன்று படத்தை திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.