Connect with us
 

News

FIR படத்துக்கு தடை விதித்த மலேசியா, குவைத் மற்றும் கத்தார் !

Published

on

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘FIR’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இயக்குநர் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படம் குவைத், மலேசியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்:- இப்படத்தில் ஜஎஸ்ஜஎஸ் தீவிரவாதிகள் குறித்த கருத்துக்கள் இருப்பதால் இந்த மூன்று நாடிகளிலும் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.