News
அதிரடி மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது மைக்கேல் டிரைலவர் வெளியானது !

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மாநகரம் புகழ் நாயகன் சந்தீப் கிஷன் அதிரடி ஆக்ஷன் வேட்டையில் உருவாகியுள்ள திரைப்படம் மைக்கேல்.
இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கெளசிக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஶ்ரீ வெங்கடேஷ்வரா ஶ்ரீனிவாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் 3-ம் தேதி திரையரங்குக்ளில் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
அதிரடி ஆக்ஷன் மாஸ் வசனங்களுடான இப்படத்தில் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.