Connect with us
 

Teaser

தனுஷ் மிரட்டும் மாஸ் ஆக்‌ஷன் கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது !

Published

on

நடிப்பு அசுரன் தனுஷ் பிறந்த நாளான இன்று கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் வெளியானது. மாஸ் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என்று இதில் அறிவித்துள்ளது படக்குழு.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மொழிகளில் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்ராஜ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.