News
என் முதல் காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன் !

தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அனுபாம பரமேஸ்வரன் இதை தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளும் படங்கள் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அனுபாம பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நிஜ வாழ்க்கையில் நீங்கள் யாரையாவது காலதிலித்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய அனுமபா பரமேஸ்வரன்.
நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன் ஆனால் அந்த காதம் ரொம்ப காலம் நீடிக்கவில்லை. அது தோல்வி அடைந்துவிட்டது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை என்றார். மேலும் அவர் கூறும்போது எனது அம்மா கையால் செய்கிற அனைத்து உணவுகளுமே எனக்கு பிடித்த உணவுகள்தான்.
கேரள உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். பிரியாணி மிகவும் பிடிக்கும் இசையில் அதிக ஆர்வம் உண்டு. தமிழில் மமுட்டு நடித்த மவுனம் சம்மதம் படத்தில் இடம்பெற்ற கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா பாடலை கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்து போனது. அந்த பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.
அடுத்த தமிழில் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடிக்கிறேன். என் வாழ்க்கையை சாதணமாக அமையியாக வாழ விரும்புகிறேன். மனதை அமைதியாக வைப்பேன் வெற்றி தோல்வி இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வேன் என்றும் கூறினார்.