வெளி நாட்டில் படித்து விட்டு இந்தியாவில் போலீஸ் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட ஒர் கிராமத்தில் மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் மட்டும் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிள் தொங்கவிடப்படுகிறார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி மட்டும் எங்கு போனார் என்பது தெரியவில்லை. அங்கு கூடுதல் காவல்த்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் உதய நியிக்கு வரும் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
அந்த வழக்கை விசாரிக்க விடாமல் கீழதிகாரியான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சக்ரவர்த்தி அழுத்தம் கொடுக்கிறார். இறந்து போன அந்த மூன்று சிறுமிகளின் விவகாரத்தில் அந்த ஊர் அமைச்சரின் அக்கா மகனுக்கு தொடர்பு இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பிக்கிறார் போலீஸ் அதிகாரியான உதயநிதி அதன் குற்றவாளி யார்? அவரை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா? இல்லையா? காணாமல் போனததாக சொன்ன சிறுமியை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இதுவரைதில் கலகலப்பான உதய நிதியை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஒரு சீரியசான உதயநிதியை பார்க்க முடியும். தன் அரசியலுக்கு எந்த அளவுக்கு வசனங்கள் மூலம் பலம் சேர்க்க முடியுமே அதை சேர்த்துள்ளார். குறிப்பாக ஹிந்திக்கு இவர் கொடுக்கும் விளக்கம் அரங்கமே அதிர்ந்தது.
ஜபிஎஸ் முடித்து முதல் பணியிடத்தை விட்டு இரண்டாவது பணியிடமாக பொள்ளாச்சிக்கு வருகிறார். அந்த ஊரில் சாதிய அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு சட்டம் தன் கடமையை செய்யும் என சட்டத்திற்க்காக பாடுபடும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சிறப்பாகவே நடித்துள்ளார்.
உதய நிதி மனைவியாக வரும் தன்யா ரவிச்சந்திரன் கணவன் – மனைவி போனில் உரையாடும் காட்சிகளும் சில முக்கியமான உதய் கேள்விக்கு பதில் சொல்லும் கதாப்பாத்திரமாக மட்டுமே சில நிமிடங்கள் வருகிறார்.
குறிப்பாக உதய் பேசும் வசங்கள் இவரின் போலீஸ் கதாப்பாத்திரதுக்கு நல்ல ஒரு ஹீரோயிசத்தை கொடுத்துள்ளார்கள்.
Cinetimee
தன் தங்கை காணாமல் போனதும் போராடும் ஒரு அக்கா கதாப்பாத்திரத்தில் வரும் ஷிவானி ராஜசேகர். அந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் பொருத்தமான ஒரு தேர்வு. ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வரும் நடிகர் ஆரி அர்ஜூனன் கண்டிப்பாக இவரின் கதாப்பாத்திரமும் இவர் பேசும் வசனங்களுக்கும் பேச வைக்கிறது நம்மை.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி அரசியல்வாதிகளுக்கும் உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கும் துணையாக வரும் ஒரு கதாப்பாத்திரம். படத்தின் வில்லனாக வரும் அரசியல்வாதியாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ராகுல்.
திபு நன் தாமஸ் இசையில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சரி மிகவும் சிறப்பாகவும் கூடுதல் பலமாகவும் உள்ளது. தன்னுடைய மூன்றாம் கண்களால் பொள்ளாச்சியின் அழகை நமக்கு இரட்டிப்பாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
ஒரு க்ரைம் திரில்லர் படமாக உருவான இப்படத்தை அதற்குள் சாதி வேறுபாடு இன்னும் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக இயக்குநர் அருண்ராஜா காமராஜா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அதற்காக இவர் தேர்வு செய்த கதாப்பாத்திரங்களும் திரைக்கதையும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.