Connect with us
 

News

புஷ்பா ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தன்னா, சமந்தா, பகத் பாசில் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வசூலை வாரி குவித்தது.

இந்த நிலையில் ஓடிடி தளமான அமேசான் தளத்தில் இந்த படம் வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 7-ம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.